ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கேப்மாரி’. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஜெய்க்கு இது 25வது படம் எனில் எஸ்.ஏ.சி. இயக்கத்தில் உருவாகியுள்ள எழுபதாவது படம் இது. சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது.
அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளைப் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் படத்தில் உள்ள கவர்ச்சிப் பகுதிகளில் சிலவற்றை எஸ்ஏசி நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இளையர்களைக் கவரும் அம்சங்கள் இருப்பதால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழுவினர் நம்புகிறார்களாம். படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.