வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சீயான்கள்’. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழு முதியவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகி உள்ளது.
“நம்மில் பெரும்பாலானோர்க்கு வயதான பெற்றோர் இருப்பார்கள். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வது நம் கடமை.
“இந்த நல்ல கருத்தைக் கிராமத்து மண்வாசனையுடன் விவரிக்கிறோம். பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
“ஏழு முதியவர்கள் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தினால் எப்படி இருக்கும். அதுதான் இந்தப் படம். படத்தில் இடம்பெறும் காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்,” என்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.