ஓவியா: அரசியல் கேள்விகள் வேண்டாம்

ஓவியா: அரசியல் கேள்விகள் வேண்டாம்

1 mins read
4ebed24f-a6fe-43ac-8630-acb62c2b47a4
தமக்கு அரசியலுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் நடிகை ஓவியா. படம்: ஊடகம் -

தமக்கு அரசியலுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் நடிகை ஓவியா. அதேசமயம் திரைத்துறையைச் சேர்ந்த சிலருக்கு அரசியல் ஆசை இருப்பது உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அரசியல் விருப்பம் அறவே இல்லாத ஒருசில நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்களிடம் கூடுமானவரை அரசியல் தொடர்பான கேள்விகளை ஊடகங்கள் எழுப்பாமல் இருப்பது நல்லது. "ஆனால் சிலரோ பொது மக்களுக்காகக் கேட்கிறோம் என்ற பெயரில் அரசியல் கேள்விகளை எழுப்புகிறார்கள். இதைத் தவிர்க்கவேண்டும்," என்கிறார் ஓவியா.