‘கர்மா என்பது முடிவில்லாமல் தன் வேலையைச் செய்யும்’

பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் கொடூர சைக்கோ மனிதர்கள் வேட்டையாடப்பட வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரான 27 வயதான பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குத் திரை உலகில் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“கர்மாவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அது முடிவில்லாமல் தொடர்ந்து வேலை செய்யும். இந்த இழப்பில் இருந்து மீண்டுவர பிரியங்காவின் குடும்பத்தாருக்குக் கடவுள் வலிமை அளிக்கட்டும்,” என்று கீர்த்தி சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

கீர்த்தியைப் போலவே தமிழ்த் திரைப்பட நாயகிகள் பலரும்  இச்சம்பவம் தொடர்பில் தங்கள் கண்டனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.