இருள் சூழும் நேரத்தில் நடக்கும் கொலைகளை நாயகன் துப்பறியும் படம் ‘இருட்டு’

துரை இயக்கத்தில், சுந்தர்.சி, சாக்சி சவுத்ரி, சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘இருட்டு’. விமலா ராமன், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இது. பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் வெளியீடு காண உள்ளது. “ஊட்டியில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பகல் பொழுதிலேயே இருள் சூழ்கிறது. அந்நேரத்தில் சில கொலைகள் நடக்கின்றன. பகலில் எப்படி இருள் சூழ்கிறது? ஏன் கொலைகள் நடக்கின்றன? என்பதுதான் கதை. இதில் சுந்தர்.சி., காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் துரை.