தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா'

1 mins read
bcc4146f-09c6-4a7b-acf6-cdfd1fbe573e
'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, இசைத்தட்டை நடிகர் விமல் வழங்க அதை ரோபோ சங்கர் பெற்றுக்கொண்டார். படம்: ஊடகம் -

சென்னையில் நடைபெற்ற 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, இசைத்தட்டை நடிகர் விமல் வழங்க அதை ரோபோ சங்கர் பெற்றுக்கொண்டார். இப்பட இயக்குநர் கெவின் கூறுகையில், "இது என்னோட முதல் படம். எல்லாரையும் போலவே நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். எனக்கு உதவிய தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், நண்பர்களுக்கு எனது நன்றி. டிசம்பர் மாதம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளோம்," என்றார். கேரள நடிகை இஷாரா நாயர், 'கல்லூரி' அகில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.