நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் தமிழுக்கு கிடைத்த புதிய நடிகர் அர்ஜுன் தாஸ். இப்படத்தில் இடம்பெற்ற இவரது வில்லன் கதாபாத்திரம் பரவலான கவனத்தை பெற்றது.
இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் ‘தளபதி 64’.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தில் இருந்து மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் திடீரென வெளியேற அவருக்கு பதிலாக ‘கைதி’ பட வில்லன் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை. நான் எதிர்பாராமல் இந்த ஆசை நிறைவேறியதால் வானத்தில் பறப்பதைப்போல் உணர்கிறேன்,” என்றார்.
விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் டுவிட்டரில் உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
“இந்தச் செய்தி வெளியானது முதலே நான் பேசமுடியாத அள வுக்கு போனேன். நடப்பது எல்லாம் கனவா, நினைவா என்றே தெரியாமல் சற்று நேரம் குழம் பிப் போனேன். இது உங்களது இதயபூர்வமான வாழ்த்தினால் நடந்தது என்றே நம்புகிறேன். மேலும் ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியும் இணைந்து இதனை நடத்தி உள்ளது.
“விஜய், விஜய் சேதுபதி ஆகி யோருடன் நடிக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அது இவ்வளவு விரைவில் நிறைவேறும் என நினைக்கவில்லை. ஒரு புதிய நடிகரான எனக்கு இது நிகரற்ற இறுதி ஆசை,” என்று குறிப்பிட்டுள்ளார்.