ரஜினிசார் எப்படியோ அப்படித்தான் கார்த்தியும் நடந்துகொள்கிறார். கார்த்தியின் எல்லாப் படங்களிலும் அவருடன் நடிக்கும் அனைவருக்கும் ரஜினியைப் போலவே சமமான அளவில் வாய்ப்புகளை வழங்கு வதாக ஜோதிகா கூறியுள்ளார்.
கார்த்தியும் ஜோதிகாவும் அக்கா- தம்பியாக முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’. இப்படத்தில் சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஜோதிகா கூறுகையில், “தம்பி எனக்கு படமல்ல, ஒரு சென்டிமெண்ட். என் தம்பி கார்த்தியோடு நடிக்கும் முதல் படம்.
“என் அம்மா ஒருநாள் படப் பிடிப்பு தளத்துக்கு வந்தபோது, ‘ஏதாவது சாப்பிடுங்கள்’ என்று சொன்னேன். ஆனால் அவர்கள் நான் நாயகியின் அம்மாவாக இங்கு வரவில்லை. நான் என்னோட பையன் படத்திற்காக வந்துள்ளேன் என்று சொன்னார்.
“அவர்கள் முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதமாக உள்ளது.
“ரஜினிசார் கூட சந்திரமுகி படத்தில் நடித்தபோது, முதல் நாள் என்னிடம் வந்து “இது உன்னோட படம், நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்னை வைத்துத்தான்,” என்றார். எவ்வளவு பெரிய மனுசன் என்று தோன்றியது. அதே உணர்வு தான் இப்போது கார்்த்தியிடமும் எனக்குத் தோன்றியது. கார்த்தி தன்னுடன் நடிப்பவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பார்,” என்றார்.