புகைப்படக் கலைஞராக ஆண்ட்ரியா

ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ‘கா’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா. காட்டில் வாழும் கொடிய மிருகங்களின் வாழ்க்கை முறையையும் குணாதிசயங்களையும் கேமராவில் பதிவு செய்யும் புகைப்பட நிபுணர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். இது முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தும் படம். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் நாஞ்சில்.