சண்டைப் பயிற்சி பெறும் யாஷிகா

புதுப்படம் ஒன்றில் அதிரடி நாயகியாக நடிக்க உள்ளாராம் யாஷிகா ஆனந்த். அதற்காக தற்போது தீவிர சண்டைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் யாஷிகா, அவ்வப்போது சில முக்கிய புகைப்படங்களையும் விவரங்களையும் பதிவிடுவார். 
இந்நிலையில் சண்டைப் பயிற்சி பெறும் காட்சிகள் அடங்கிய காணொளிப் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மிக விரைவில் அந்தப் புதுப்படம் குறித்த முதல் தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.