‘எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை’

பிற நடிகைகளின் வளர்ச்சியைக் கண்டு தாம் பொறாமைப்படுவதில்லை என்கிறார் லாவண்யா திரிபாதி. 

தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் நடித்த, அவர் தற்போது ‘மாயவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தாம் நடிக்க மறுத்த படங்கள் எப்படியோ வெற்றி பெற்று விடுவதாக அவர் கூறியுள்ளார்.

“சில படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அவற்றைத் தவிர்த்தேன். எனினும் அவை வெற்றி பெற்றதால் நான் வருத்தமடையவில்லை. 

“எனக்கு ஒத்துவரக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்கிறேன். தெலுங்கில் வெற்றி பெற்ற  ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நான்தான்  முதலில் ஒப்பந்தமானேன். ஆனால் கதை பிடித்திருந்தும் நடிக்க முடியவில்லை. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

“மற்ற நடிகைகள் முன்னுக்கு வந்துவிட்டனரே, நம்மால் எதையும் சாதிக்க முடியவில்லையே என்றெல்லாம் நான் ஏங்குவதில்லை. எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்குக் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்,” என்கிறார் லாவண்யா திரிபாதி.