மித்தாலியாக டாப்சி

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை குறித்த திரைப்படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணிக்கப்படும் மித்தாலி ராஜ் வாழ்க்கை குறித்த திரைப்படம் ‘சபாஷ் மிது’ என்ற பெயரில் தயாராகிறது.

இந்தப் படத்தை வியாகம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

ரெய்ஸ் ஹெல்மர் ராகுல் தோலாகியா இயக்குகிறார்.

மித்தாலி ராஜின் 37வது பிறந்த நாளில் நேற்று முன்தினம் இந்த அறிவிப்பு வெளியானது. மித்தாலி வேடத்தில் டாப்சி நடிக்க உள்ளார்.

இதுகுறித்து டாப்சி கூறுகை யில், ‘‘உங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு தருவது எனத் தெரிய வில்லை. ஆனால், மைதானத்தில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை, நீங்கள் பெருமைப்படும் வகையில் திரையில் சிறப்பாக நடிக்கமுடியும் என உறுதி தருகிறேன்,’’ என்றார்.

இப்போது இந்தியா முழுவதிலும் உள்ள ஆளுமைமிக்க அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்களின் வாழ்க்கையைத் தழுவி சினிமா படமாக்கும் பாணி தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா, எம்ஜிஆர், என்டிஆர், மகேந்திர சிங் டோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரானது.

இந்த வரிசையில் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறும் படமாகிறது.

இந்தப் படத்தில் நடிக்கவுள்ள டாப்சி கூறுகையில், “இந்த பாத்தி ரத்தில் நடிப்பது பெருமைக்குரியது. இந்தியாவில் பெண்களின் கிரிக்கெட் பார்க்கப்பட்ட கோணத்தை முற்றிலும் மித்தாலி ராஜ் மாற்றிய விதம் உண்மையிலேயே சொல்ல வேண்டிய கதைதான். அவர் எப்போதும் தைரியமாகவும் வலுவாகவும் இருந்தார்.

“நம் நாட்டின் உயிரோட்டமாகக் கருதப்படும் கிரிக்கெட் விளை யாட்டைக் கற்றுக்கொள்ளவும் நான் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன்,” என்றார்.

இதுகுறித்து மித்தாலி ராஜ் கூறுகையில், “பெரிதாக கனவு காணும் இளம் பெண்களைச் சென்றடைய இது பெரிய தளமாக அமையும். நான் எப்போதும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தேன். எனது கதையைத் திரையில் உயிரோட்டத்துடன் கொண்டு வருவதற்காக மட்டுமல்லாமல், கனவு காணத் துணிந்த இளம் பெண்களைச் சென்றடைய ஒரு பெரிய தளத்தை வழங்கியதற்காகவும் அஜித் அந்தரே, வியாகம் 18 ஸ்டூடியோவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என கூறினார்.

மித்தாலி ராஜின் பிறந்தநாளைக் கொண்டாடிய டாப்சி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் மித்தாலி கிரிக்கெட் விளையாட்டில் கடந்து வந்த பாதையை நினைத்து தாம் பிரமித்துப்போயிருப்பதாகவும் அதற்காக சபாஷ் மித்தாலி என்று ஹேஸ்டேக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் டாப்சியின் பதிவைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!