எனக்குப் பிடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கணக்கில்லாமல் செலவு செய்வேன். எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நன்கொடையும் அள்ளி அள்ளிக் கொடுப்பேன், இதெல்லாம் என் விருப்பம் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மூக்கு மேல கோபம் என்று பலரும் சொல்வது உண்டு.
இந்த கோபப்படும் பழக்கம் குறித்து கங்கனா கூறுகையில், “என்னைப் பலரும் கோபக்காரி என்கிறார்கள். எனது கோபத்தில் எப்போதுமே அர்த்தமும் நியாயமும் இருக்கும்.
“எனது ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு திட்டம், தூரப்பார்வை இருப்பதை உணர முடியும்.
“என்னை முன்னேறவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்களுக்கு எப்போதுமே நான் எதிரிதான். நான் எப்போது ஆத்திரத்தை வெளிப்படுத்தினாலும் அதனால் எனக்கு நல்லதுதான் நடந்து இருக்கிறது.
“எனக்கு சிறு குழந்தைகளுக்கு இருக்கிற மாதிரி மனது. அது யாருடைய கருத்துக்கும் எட்டாது.
“பணத்தை எவ்வளவு கவனமாக செலவு செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும்,” என்கிறார் கங்கனா.
‘கங்கனாவைப் பின்பற்ற வேண்டாம்’
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத், “ஜெயா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வசதியாக உடல் பரும னாக ஹார்மோன் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டேன்,” என்றார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் “ஹார்மோன் மாத்திரைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். நடிகர்க ளைப் பின்பற்றும் பலர் இங்குண்டு,” என கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் டாக்டர் ரமேஷ் கூறியபோது, “மாதவிடாய் பிரச்சினை, தைராய்டு, வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுப்ப துண்டு. நடிகர்களைப் பார்த்து ஹார்மோன் மாத்திரைகளைப் பயன் படுத்த பொதுமக்கள் நினைக்கக் கூடாது. மிக அவசியம் என்றால் மருத்துவரின் பரிந்துரையில் உட்கொள்ளலாம்,’’ என்றார்.