தமது பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான கணக்குகளை உருவாக்கி இருப்பதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் வெளியாகும் புகைப்படங்களும் போலி யானவை என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது தலைப்பி டப்படாத புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் ரம்யா. இந்நிலையில் இவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் மேலாடை இல்லாமல் காணப்படும் இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, அது ரம்யா பாண்டியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இப்படத்தைப் பரவலாகப் பகிர்ந்து வந்த நிலையில், அது தன்னுடைய புகைப்படம் அல்ல என்று ரம்யா தெளிவுபடுத்தி உள்ளார்.
தனது பெயரில் போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் வெளியாகும் தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.