‘எதிலும் போட்டி இல்லை’

சின்னத் திரையில் வெற்றி வலம் வந்த தமக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இளம் நாயகி வாணி போஜன்.

இந்தப் பெயர் ரசிகர்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ ‘தெய்வமகள்’ சத்யா என்றால் எல்லோரும் இவரை அடையாளம் கண்டுகொள்வர். தற்போது ஒரேயடியாக 5 தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாணி. ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்குமாம்.

“வைபவுடன் ‘லாக்கப்’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய இரு படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் மருத்துவராகவும், மற்றொன்றில் தோழியாகவும் திரையில் தோன்றுகிறேன்.

“ஆதவ் கண்ணதாசனுடன் ஒரு படம், ‘மிஸ்டர் டபிள்யூ’ ஆகிய இரு படங்களிலும் சற்று வித்தியாசமான வாணியைப் பார்ப்பீர்கள். அதேசமயம் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அப்படி ஒரு சவாலான வேடம். எனது வாழ்நாள் கதாபாத்திரம் என்றும் கூட சொல்லலாம்,” என்கிறார் வாணி.

ஒருசிலர் சின்னத்திரையைக் குறைத்து மதிப்பிடுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிடுபவர், தொலைக்காட்சி வட்டாரங்களில் மிகத்திறமை வாய்ந்த கலைஞர்கள் பலர் இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

“சின்னத்திரையில் கிடைத்த புகழ்தான் என்னைச் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறது. நானெல்லாம் சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இதுவரை சுமார் 400 விளம்பரப் படங்களில் நடித்திருப்பேன். மாடலிங் கூட செய்திருக்கிறேன். ஆனால் தொலைக்காட்சி, சினிமா பக்கம் வருவேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை,” என்று சொல்லும் வாணி போஜனுக்கு, விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதுதான் சிறு வயது கனவாம்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பு விமானத் துறையில்தான் பணியாற்றி உள்ளார். வாணியின் சொந்த ஊர் ஊட்டி. படித்தது ஆங்கில இலக்கியம். இவரது அழகைக் கண்டு தோழிகள் விளம்பரப் படங்களில் ஏன் நடிக்கக் கூடாது என்று தூண்டி விட்டுள்ளனர். அதன் பிறகுதான் சின்னத்திரை பிரவேசம் நடந்துள்ளது.

டி.விக்கும் சினிமாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார். அதேசமயம் இரண்டிலும் போட்டி இல்லை என்பதும் வாணியின் கருத்தாக உள்ளது.

“சின்னத்திரையில் ஒரு தொடரை ஐந்தாண்டுகளுக்கு இழுத்துச் செல்வர். ஆனால் சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் முடிந்துவிடும். படத்தின் வெளியீட்டுத் தேதி ஒருவித பயத்தை ஏற்படுத்தும். சின்னத்திரையில் இந்தப் பயமெல்லாம் கிடையாது.

“நான் நடித்த ‘தெய்வமகள்’ தொடர் பெரிதாகப் பேசப்பட்டதால் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. மேலும் அவ்வாறு எந்தப் போட்டியும் இருப்பதாகக் கருதியதும் இல்லை. காரணம் அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்போம்.

“அதேபோல் சினிமா என்பது போட்டி போட்டு ஜெயிப்பதற்கான களம் கிடையாது. இது முழுக்க முழுக்க திறமை சார்ந்தது. கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இல்லை என்றால், வாய்ப்பு கிடைக்காது,” என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் வாணி.

சின்னத்திரையை விட்டு விலகியது வருத்தமளித்தாலும் பட வாய்ப்புகள் திருப்திகரமாக இருப்பதால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறதாம். அதேசமயம் ரசிகர்களை நேரில் சந்திக்கும்போது ‘தொலைக்காட்சியில் உங்களைப் பார்க்காதது ஏக்கத்தைத் தருகிறது’ என்று கூறுவதைக் கேட்கையில் வருத்தம் எட்டிப் பார்க்கிறது என்கிறார்.

“சினிமாவுக்காக சின்னத்திரையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சின்னத்திரையில் எனக்கான வாய்ப்புகள் பல காத்திருந்தன. எனவே துணிந்து முடிவெடுக்க வேண்டியிருந்தது.

“நல்ல வேளையாக நான் எடுத்த சரியான முடிவின் பலனாக தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன்,” என்று சொல்லும் வாணி, திறமையான கதாநாயகர்கள் அனைவரையுமே தமக்குப் பிடிக்கும் என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!