உலகளவில் ரவுடி பேபி பாடல் சாதனை

உலகளவில் ரவுடி பேபி பாடல் சாதனை

1 mins read
9057d31b-d9d9-4bac-bf39-185986744a87
படம்: ஊடகம் -

நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் இந்தியாவில் முதல் இடத்திலும் உலக அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'மாரி 2'.

இந்தப் படத்தில் தனுஷும் சாய்பல்லவியும் இணைந்து நடனமாடிய 'ரவுடி பேபி' பாடல் இணையத்தில் வெளியான நாள் முதல் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், பிரபுதேவா நடனம் அமைத்த இந்தப் பாடல் இதுவரை யுடியூபில் 71 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

தற்போது, உலக அளவில் யுடியூப் வெளியிட்ட இந்த ஆண்டின் முதல் 10 பாடல் காணொளி பட்டிய லில் ஏழாவது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்த 'ரவுடி பேபி' பாடல். அத்துடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியப் பாடல் என்ற பெரு மையையும் இப்பாடல் பெற்றுள்ளது.

இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.