தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இட்லி, சாம்பாரில் மயங்கிய காஜல்

1 mins read
facfa159-dd63-4880-b592-464186440d31
அப்பா செல்லமான காஜல் விதவிதமாக கேக் செய்து அப்பாவை சாப்பிடச்சொல்லி ரசிப்பாராம். படம: ஊடகம் -

முன்பெல்லாம் அசைவ உணவுகளை ருசித்து ஒரு பிடி பிடித்துவந்த காஜல் அகர்வால், இப்போது முழுக்க முழுக்க சைவ உணவு பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார். இட்லி, சாம்பார் என்றால் காஜலின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்துவிடுமாம். அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பமும் தேங்காய்ப் பாலும் தன் மனதில் இடம்பிடித்துள்ளதாக காஜல் கூறுகிறார். காஜலுக்கு சமைக்கவும் கொஞ்சம் தெரியும் என்கி றார். மும்பை வீட்டில் இருந்தால் விதவிதமாக கேக் செய்வது அவரது பொழுதுபோக்காக மாறிவிடுமாம். அதை தன் அப்பாவை ருசிக்கச் சொல்லி, அவரது அன்பில் நனைவாராம்.