‘திருவாளர் பஞ்சாங்கம்’

ஆனந்த் நாக் நாயகனாக நடிக்க, மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங் கம்’. நகைச்சுவை வேடத்தில் ‘காதல்’ சுகுமாரும் ஊர்வசியும் நடித்துள்ளனர். மேலும் ‘ஆடுகளம்’

நரேன், சுதா கௌதம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டம் பெற்ற சராசரி இளைஞன் ஒருவன் ஜோதிடம், ஜாதகம், நல்ல நேரம் ஆகியவற்றின்

மீது அதிகப்படி நம்பிக்கை வைத்திருக்கிறான். எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்த்து செயல்படுகிறான். இந்நிலையில் திடீரென அவன் வாழ்வில் ஒரு பிரச்சினை முளைக்கிறது. வழக்கம்போல் அதற்குத் தீர்வு காண ஜோதிடம் பார்க்கிறான். அவனால் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடிகிறதா?

ஜோதிடம் அவனுக்குக் கைகொடுக்கிறதா என்பதை விவரிக்கிறது ‘திருவாளர் பஞ்சாங்கம்’. கதா நாயகனின் வாழ்க்கையில் 7 நாட்களில் நிகழும் சம்பவங்கள்தான் இப்படம் என்கிறார் இயக்குநர். தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.