அஜித் ‘தல’ ஆன ரகசியத்தை போட்டு உடைத்த முருகதாஸ்

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது யார் என்ற ரகசியத்தை ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

தர்பார் இசை வெளியீட்டு விழா அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தீனா’ படத்தில் நடித்தபிறகு தல ஆனார்.

அதில் இருந்து அவரை அனைவரும் ‘தல’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது முருகதாஸ் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ், அஜித்துக்கு ‘தல’ என்று பெயர் வைத்தது ரஜினிசார் தான் என்று கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

அஜித் மீது ரஜினி மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில்தான் ரஜினி அஜித்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்தது தெரியவந்துள்ளது.

அது சரி இதை ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லவே இல்லை என்று பலரும் முருகதாஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எத்தனையோ பேட்டிகளில் முருகதாஸிடம் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது குறித்து கேட்டபோது ஏன் இந்த உண்மையை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

“சிறு வயதில் நிலாவை பார்த்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது நிலவில் நிற்பது போன்று உள்ளது. ரஜினியைப் பார்த்து பார்த்து ரசித்த, ரசிக்கும் ரசிகன் நான்.

“ஒரு குச்சியை நாயகன் என்றால் கூட அது திமிருடன் ஆடும். ஆனால் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்தும் சிறிதும் திமிர் இல்லாதவர் ரஜினி. அவரை போன்றே இருக்க நான் ஆசைப்படுகிறேன்,” என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் பேச்சால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!