'இன்னும் தலைப்பு வைக்கவில்லை'

'இன்னும் தலைப்பு வைக்கவில்லை'

1 mins read
9cf77d4e-db88-4ea9-817a-d9e40006a242
-

'விக்ரம்-58' படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை என அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார். முழுநீள அதிரடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு 'அமர்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் விக்ரம் பல்வேறு தோற்றங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இதை மறுத்துள்ளார்.

'விக்ரம்-58' படத்துக்குத் தலைப்பு வைக்கப்படவில்லை என்றும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.