மாணிக்ஜெய் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் 'பரமு'. கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கிறார்கள். இம்மாணவர்களின் வாழ்க்கையில் திடீரென திகிலான சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அதன் உச்சகட்டம் என்ன என்பது தான் இப்படமாம். மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.
ஆட்டம் போடும் மாணவர்களின் கதையைச் சொல்ல வருகிறது 'பரமு'
1 mins read
-

