இந்தியில் பதிலளிக்க மறுத்த சமந்தா

1 mins read
020908cd-587f-4552-8cfc-67d8c7b5807c
செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. படம்: ஊடகம் -

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா.

அதன் பிறகும் சிலர் இந்தியில் பதிலளிக்குமாறு வற்புறுத்த, தாம் தென் இந்தியாவை சேர்ந்தவள் என்றும், அதனால் தமக்கு இந்தியில் சரளமாகப் பேச வராது என்றும் கூறினார்.

"எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். அதற்காக இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. சரளமாக வராது என்பதால் இந்தியில் பேசமாட்டேன்," என்றும் சமந்தா கறாராகக் குறிப்பிட்டதற்கு, சக கலைஞர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டார்.

அப்போதுதான் சில செய்தியாளர்கள் அவரிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளனர். அண்மையில் நடிகை டாப்சிகூட செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்தார்.