சுடச் சுடச் செய்திகள்

நடிகர் சதீஷ் திருமணம்: சிவகார்த்திகேயன் தம்பதியர் நேரில் வாழ்த்து

நடிகர் சதீஷின் திருமணம் சென்னையில் விமரிசையாக நடந்தேறியுள்ளது. ‘சிக்ஸர்’ படத்தின் இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவை அவர் மணந்துள்ளார். நேற்று முன்தினம் காலை நடைபெற்ற இவர்களது திருமணத்திலும், பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பிலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,  விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.