வதந்தியால் வருத்தமடைந்த இந்துஜா

வதந்தியால் வருத்தமடைந்த இந்துஜா

1 mins read
e3df860a-53ec-4a45-bc6c-b4aa62a7164b
'பிகில்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட இந்துஜா. படம்: ஊடகம் -

தன்னைப் பற்றி வீண் வதந்திகள் பரவுவது வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார் நடிகை இந்துஜா.

சினிமா துறை மீது தாம் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியான 'பிகில்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு வாங்கி உள்ள இந்துஜா, அடுத்து இரு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வணிக ரீதியிலான படங்களில் மட்டுமே தாம் கவனம் செலுத்தப் போவதாகவும், விருது வாங்கும் படங்கள் தமக்குத் தேவையில்லை என்றும் இந்துஜா கூறியதாக ஒரு தகவல் வெளியானது. இதை அவர் மறுத்துள்ளார்.

"சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல. இத்தகைய வார்த்தைகள் வேதனை அளிக்கின்றன," என்று தமது புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இந்துஜா.