திறமையை நம்பும் கதாநாயகி

திறமையை நம்பும் கதாநாயகி

1 mins read
4514fa68-2915-49d1-b97f-2ec64d2cf751
என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. வாய்ப்புக்காக படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை என்கிறார் இந்தி நடிகை மஞ்சரி பட்நிஸ்.  -

தங்கள் ஆசைக்கு இணங்கினால்தான் வாய்ப்புத் தருவோம் என்று சில இயக்குநர்களும் நடிகர்களும் கூறியதால் தான் தாம் நடிப்பதையே நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார் இந்தி நடிகை மஞ்சரி பட்நிஸ்.

இவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து 'சக்தி' படத்தில் நடித்தவர். அது வெற்றிகரமாக ஓடினாலும் மஞ்சரியை அதன் பிறகு எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் பாலியல் தொல்லை காரணமாகவே திரையுலகை விட்டு மன உளைச்சலுடன் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

"என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. வாய்ப்புக்காக படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. தெலுங்குத் திரையுலகைப் புறக்கணித்து விட்டேன். பிற மொழிகளில் வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பது குறித்து யோசிப்பேன்," என்கிறார் மஞ்சரி.

எனினும் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.