ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட சாக்‌ஷி

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட சாக்‌ஷி

1 mins read
90f3630a-9f84-4ed6-b932-0247146e0b4f
-

முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், நேரம் கிடைக்கும் சமயத்தில் சமூக அக்கறையுடன் கூடிய நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார் பிக்பாஸ் புகழ் நடிகை சாக்‌ஷி அகர்வால். பன்முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்தில் தாம் மிகவும் சாந்தமான, அமைதியான பெண் என்கிறார். அண்மையில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்குச் சென்று அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டார் சாக்‌ஷி. அந்தக் குழுந்தைகளுடன் சிரித்துப் பேசி மகிழ்வித்து, பின்னர் பரிசுகளும் கொடுத்தார். "குழுந்தைகளின் அன்பில் கரைந்து போனேன், இவர்களின் பொன் சிரிப்பும் தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றின. அடிக்கடி இந்தக் குழந்தைகளைப் பார்க்க முடிவெடுத்துள்ளேன்," என்கிறார் சாக்‌ஷி.