கவர்ச்சியாக நடிக்கத் தயாரான சிருஷ்டி

கவர்ச்சியாக நடிக்கத் தயாரான சிருஷ்டி

1 mins read
b5a4ddde-1460-44ad-bf1d-1b936f9817f4
பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் சிருஷ்டி டாங்கே.    -

தனது கன்னக் குழி அழகால் ரசிகர்களைக் கிறங்கடித்த சிருஷ்டி டாங்கே, தனக்கான பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே 2010ல் 'காதலாகி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு 'மேகா', 'டார்லிங்', 'எனக்குள் ஒருவன்', 'கத்துக்குட்டி', 'வில் அம்பு', 'ஜித்தன் 2', 'தர்மதுரை', 'அச்சமின்றி', 'காலக்கூத்து' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் ஒன்றிரண்டைத் தவிர மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் 'ராஜா வுக்கு செக்' என்ற ஒரு படம் மட்டுமே இவரது கைவசம் உள்ளது.

குடும்பப் பாங்காக நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இந்த கவர்ச்சிப் போட்டியில் இல்லாததும் படங்கள் குறைவதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

சிருஷ்டி டாங்கேவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வேதனையை ஏற்படுத்த தற்போது கவர்ச்சிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

படவாய்ப்புகள் குறையும் நடிகைகள் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர் களையும் தயாரிப்பாளர்களையும் கவரும் யுக்தியை சிருஷ்டி டாங்கேவும் கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளார் என்கின்றனர். சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.