'சினம்' படத்துக்காக இருமாத சண்டை பயிற்சி

'சினம்' படத்துக்காக இருமாத சண்டை பயிற்சி

1 mins read
c7bf6d28-3296-4584-99f4-abb6488929f2
மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பாக விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். படம்: ஊடகம் -

அருண் விஜய் நடிக்கும் 'சினம்' படத்தின் சண்டைக் காட்சிக்காக புதுமுகங்களுக்கு இருமாத சண்டைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

'சினம்' படத்தை இயக்கி வருகிறார் ஜி.என்.ஆர். குமரவேலன். இவர் இதற்கு முன் 'நினைத்தாலே இனிக்கும்', 'ஹரிதாஸ்' உட்பட சில படங்களை இயக்கியவர்.

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பாக விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். அவரது ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதிரடி சண்டைக் காட்சிகளை எடுக்க உள்ளனர். ஸ்டன்ட் சில்வாவும் அருண் விஜய்யும் இந்தக் காட்சியில் மோதுகின்ற னர். அவர்களோடு படத்தில் நடிக்கும் சில புதுமுகங்களும் மோதுகின்றனர். இதை வழக்கமான சண்டைக் காட்சிகளாக இல்லாமல் யதார்த்தமான காட்சிகளாக அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சண்டைக் காட்சியில் பங்குபெறும் அந்த புதுமுகங்களுக்கு கடந்த இரு மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.