மீண்டும் இணையும் ஜெய்-அதுல்யா

மீண்டும் இணையும் ஜெய்-அதுல்யா

1 mins read
cff8398f-6633-4a56-8a9c-80663bc0c580
'கேப்மாரி' படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய்யும் அதுல்யாவும் மீண்டும் 'எண்ணித் துணிக' என்ற புதிய படத்திலும் ஜோடியாக சேர்ந்து நடிக்க உள்ளனர். படம்: ஊடகம் -

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள 'கேப்மாரி' படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய்யும் அதுல்யாவும் மீண்டும் 'எண்ணித் துணிக' என்ற புதிய படத்திலும் ஜோடியாக சேர்ந்து நடிக்க உள்ளனர்.

அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் எஸ்.கே. இயக்கும் 'எண்ணித்துணிக' படத்தில் ஜெய், அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். சண்டை, குற்றம், காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில் வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அத்துடன் 'நெடுநல்வாடை' புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்தப் படம் மதுரை, கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.