ரஜினிகாந்த்: என்னை ஏன் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கிறார்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ளது ‘தர்பார்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பட விளம்பர வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. அந்த விழாவில் ரஜினிகாந்த், முருகதாஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் “என்னை ஏன் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தார்கள் என்று தெரியவில்லை,” என்று கூறிய

துடன் தன்னுடைய கனவு கதாப்பாத்திரம் குறித்தும் பேசியுள்ளார்.

“நான் எப்போதும் எளிமையான கதாப்பாத்திரங்களையே அதிகமாகத் தேர்வு செய்வேன். எனக்கு காவல்துறை அதிகாரியாக நடிக்க விருப்பம் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் வித்தியாசமான ஒரு கதையுடன் வந்தார். அது சாதாரண போலிஸ் கதாப்பாத்திரம் கொண்ட கதை இல்லை. அவருடைய கற்பனை சக்தி, அதனை உண்மையாக்கிப் பார்க்கும் திறன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

“நான் 160 படங்களில் பணியாற்றியுள்ளேன். 40 முதல் 45 வருடங்கள் வரையிலான திரை அனுபவம் உள்ளது. ஆனால் நான் நடிக்க விரும்பும் ஒரு கதாபாத்திரம் இதுவரை எனக்கு அமையவே இல்லை. அதுதான் திருநங்கை வேடம். அந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது என்னுடைய கனவு கதாப்பாத்திரம்.

“இப்போதும் நான் தொடர்ந்து பணியாற்றுவதற்குக் காரணம் பணம் தான் (சிரிக்கிறார்). முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால், சினிமா மீதான ஆர்வம்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

“ஒரு நடிகராக நான் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளேன் எனக் கேட்கிறீர்கள். ஆரம்பத்தில் நான் கூச்ச சுபாவம் உள்ளவனாக, பதற்றம் கொண்டவனாக இருந்தேன். மற்றப்படி எல்லாமே இயக்குநரின் கையில்தான் உள்ளது. நான் இயக்குநர்களின் நடிகன். எனக்குத் தரப்பட்ட காட்சியின் சூழலுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது தான் நடிப்பாகும். மற்றபடி நான் மாறியதாக நினைக்கவில்லை.

“நாற்பது வருடங்களுக்கு முன்பு 80களில் நான் நடித்த படம் ஒன்று வெளியானது. அப்போது சிறப்புக் காட்சிகள் எல்லாம் கிடையாது. பொது மக்களுடன் இணைந்து திரையரங்கு ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடைய பெயருக்கு முன்னால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று போடப்பட்டு இருந்தது. என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி இப்படி பெயரை போடலாம் என்று கேள்வி எழுப்பினேன். நான் ‘சூப்பர் ஸ்டார்’ என்றே அழைக்கப்படுவேன் என்று அப்போது நான் நினைக்கவே இல்லை. இப்போதும் நான் அப்படித்தான் நினைக்கின்றேன். அவர்கள் ஏன் என்னை ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கிறார்கள் என்று இன்று வரை எனக்குப் புரியவே இல்லை.

“என்னுடைய பெரிய ஊக்கம், அமிதாப்பச்சன்தான். எங்கள் நட்பை விளக்கும் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. அவருக்கு என்னைப் பிடிக்கும். நாங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தபோது, அவர் என்னிடம் ‘60 வயதுக்குப் பிறகு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூன்று விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொள். தினமும் உடற்பயிற்சி செய். தொடர்ந்து வேலை செய். தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று விடு. அப்புறமாக, அரசியலுக்குள் நுழையாதே,’ என்றார். சூழ்நிலை காரணமாக என்னால் மூன்றாம் அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்க முடியவில்லை.

“படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் பணியாற்றியிருக்கும் சுனில் ஷெட்டி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இறுதியில் எனக்கும் அவருக்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி உள்ளது. அந்த சண்டைக் காட்சியில் அவர் எவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார் என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்,” என்று ரஜினிகாந்த் பேசினார்.

‘தர்பார்’ படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தவர்கள், “படத்தில் ரஜினி மிகவும் இளமையாகவும் ஸ்டைலாகவும் தெரிகிறார். பல ஆண்டுகள் கழித்து பழைய ரஜினியை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. இந்த மனிதருக்கு வயதே ஆகாதா என்று வியக்கின்றனர். ரஜினியின் கண்ணிலும் செயலிலும் பழைய குறும்பு தெரிகிறது.

முருகதாஸ் மீண்டும் ரஜினியை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. “தயவுசெய்து அதை முதலில் செய்யுங்கள் முருகதாஸ். ‘தர்பார்’ படத்தில் பழைய ரஜினியை அருமையாக காட்டியுள்ளீர்கள்,” என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

படம் ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!