‘பரதேசி’, ‘பேராண்மை’, ‘கபாலி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. இவர் அண்மையில் நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். அவரைத் தொடர்ந்து ரித்விகா, தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது ஈர்ப்பு இருப்பதாகக் கூறி அதிர வைத்தார். திருமணமான நடிகர் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக அவர் கூறியது, ரசிகர்களை அதிர வைத்தது. இந்நிலையில் ‘காதலில் விழுந்தேன்’, ‘நீர்ப் பறவை’, ‘வம்சம்’, ‘மாசிலாமணி’ ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா.
இவர் தனக்கான ஈர்ப்பு குறித்து தெரிவித்திருப்பது, ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் கிருத்திக் ரோஷன் மீதுதான் எனக்கு ஈர்ப்பு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் தாங்கள் விரும்பும் நடிகர்களைப் பற்றி வெளிப்படையாக பேசி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.