தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினியும் தனுஷும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையின்போது திரைக்கு வருகிறது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40வது படமாகும். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு ‘சுருளி’ என்று பெயர் வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தனுஷின் 41வது படத்தை மாரி செல்வராஜும் 42வது படத்தை ராம்குமாரும் இயக்க உள்ளதாகவும் தனுஷின் 43வது படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்போதைய சிறுத்தை சிவா இயக்கத்தைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடிக்கவுள்ள படம் தனுஷின் 43வது படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
தனுஷின் இன்னும் பெயர் வைக் கப்படாத ‘டி40’ படத்தில் தனுஷின் தோற்றத்தைப் பார்த்தால் ‘பேட்ட’ ரஜினி போன்றே உள்ளதாக சொல்கின்றனர்.
படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் பெரிய மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினி வைத்திருந்த மீசைதான் நினைவுக்கு வருவதாகவும் பலரும் கூறியுள்ளனர்.