தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாறிமாறி வாழ்த்து கூறிக்கொண்ட சல்மான், சிவகார்த்திகேயன்

1 mins read
ac2385e8-4482-4d7f-aa8b-77742bef8538
நேற்று முன்தினம் நடைபெற்ற 'தபாங் 3' விளம்பர நிகழ்ச்சியில்  கலந்துகொண்டார் சல்மான் கான்.  அதன்பிறகு சிவகார்த்திகேயனை சந்தித்த சல்மான் கான் அவருடன் ஒரு சில விஷயங்கள் பற்றிப் பேசினார். அதன்பின்னர் இருவரும் 'ஹீரோ', 'தபாங் 3' படங்களின் வெற்றிக்காக மாறி மாறி வாழ்த்துகளைக் கூறிக்கொண்டனர். படம்: ஊடகம் -

பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கோலிவுட் நடிகர் சிவகார்த்திகேயனும் அவரவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் சிறப்பாக வெற்றிபெற வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி வாழ்த்துகளைக் கூறிக்கொண்டனர்.

சிவகார்த்திகேயன் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தைத் தொடர்ந்து 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதேபோல் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் தற்போது 'தபாங் 3' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தையும் கே.ஜே.ஆர். நிறுவனமே தயாரித்துள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற 'தபாங் 3' விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சல்மான் கான்.

அதன்பிறகு சிவகார்த்திகேயனை சந்தித்த சல்மான் கான் அவருடன் ஒரு சில விஷயங்கள் பற்றிப் பேசினார். அதன்பின்னர் இருவரும் 'ஹீரோ', 'தபாங் 3' படங்களின் வெற்றிக்காக மாறி மாறி வாழ்த்துகளைக் கூறிக்கொண்டனர்.