திரையரங்கில் அல்ல; நெட்பிளிக்சில் ஆர்.கே. நகர் படம் வெளியீடு

திரையரங்கில் அல்ல; நெட்பிளிக்சில் ஆர்.கே. நகர் படம் வெளியீடு

1 mins read
4f3a85e0-116c-4a9c-93f9-2bea8fb9ee17
இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள படம் 'ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். படம்: ஊடகம் -

வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படம் தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள படம் 'ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனதால் இப்போது இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக 'நெட்பிளிக்ஸ்' எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.