பரத் நடிப்பில் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘காளிதாஸ்’ படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார் பரத்.
“வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆகிவிட்டது. நேற்று மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும்போது ‘காளிதாஸ் சக்சஸ் மீட்’ இருக்கு என்று சொன்னார்கள். இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
“நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கும் சில படங்கள் தோல்வி தந்துள்ளன. அது எல்லா நாயகன்களுக்கும் வரும்தான். ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்ல படம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்துள்ளது.
“இந்தப்படத்தை பார்த்துள்ள பலரும் படம் நல்லாயிருக்கு, ஆனால் இவர் நடித்துள்ளார். இவருக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை என்று சொல்லி உள்ளனர். இது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்தப் படத்தை முதலில் பார்த்த பத்திரிகையாளர்கள் பெரிதாகக் கொண்டாடினார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல வெற்றியை சுவைத்துள்ளேன்,” என்று பரத் கூறியுள்ளார்.