காதலரை கரம்பிடித்த ரிச்சா

காதலரை கரம்பிடித்த ரிச்சா

1 mins read
a7d03cec-a8ef-407e-99d5-d4cb3ec4b34d
'ஒஸ்தி' படத்தில் நடிகர் சிம்புவுடன்  நடித்திருந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தனது நீண்ட நாள் அமெரிக்கக் காதலரை கரம் பிடித்துள்ளார்.  படம்: ஊடகம் -

'ஒஸ்தி' படத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்திருந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தனது நீண்ட நாள் அமெரிக்கக் காதலரை கரம் பிடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் 2010ல் வெளிவந்த 'லீடர்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரிச்சா, தமிழில் 'மயக்கம் என்ன', 'ஒஸ்தி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும் கவர்ச்சியும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் வகையில் அமைந்திருந்தன. இருப்பினும் அதன்பின்னர் சில தெலுங்குப் படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார். அங்குள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து முடித்தார்.

நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்கச் சென்றது பலருக்கும் வியப்பைத் தந்தது. அதற்குப் பிறகு பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி பரவிய போதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்க முறைப்படியும் பெங்காலி முறைப்படியும் இனிதே நடந்தேறி உள்ளது.