'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அருண் விஜய் 'அக்னி சிறகுகள்', 'மாபியா', 'பாக்சர்', 'சினம்' ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'ஈரம்' படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'ஜிந்தாபாத்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த ஐந்து படங்களும் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் இந்த படங்கள் வெளியான பிறகு அவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அருண் விஜய்ய காட்டில் பட மழை
1 mins read
-

