அரசியலைக் கையில் எடுக்கும் 'மக்கள் செல்வன்'

அரசியலைக் கையில் எடுக்கும் 'மக்கள் செல்வன்'

1 mins read
f9362a95-44a2-4b0d-b25a-c0eddd075c0b
விஜய் சேதுபதி நடித்துவரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் குடியுரிமைப் பிரச்சினையைக் கையில் எடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். படம்: ஊடகம் -

'மக்கள் செல்வன்' என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்பொழுது நடித்துவரும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடித்து வரும் இந்தப் படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கியது. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் குடியுரிமைப் பிரச்சினையைக் கையில் எடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். படத்தின் முதல் பார்வை விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது.