ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், செளகார் ஜானகி, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தம்பி’. இந்தப் படத்தை ஜோதிகாவின் தம்பி தயாரித்துள்ளார். ஆக இரண்டு தம்பிகளை இணைத்
திருக்கிறது இந்த ‘தம்பி’.
மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சத்யராஜ், அம்மா சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா என வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் 15 ஆண்டிற்கு முன்பு காணாமல் போகிறார். அதே சமயம் கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் கார்த்தி காணாமல் போன மகன் தான்தான் என்று சத்யராஜ் வீட்டுக்கு வருகிறார்.
அங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும் அவரைக் கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்காக கொல்ல நினைக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, திருடனாகவும் மகனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். திருடனாக மற்றவர்களை ஏமாற்றச் செய்யும் சேட்டைகளும் பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் நெகிழ வைக்கிறது.
டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். இந்தப் படமும் இணையத்தில் வெளியானதால் வசூல் பாதிக்கப்படும் என்ற கவலையில் இருக்கிறது படக்குழு.