நடிகை அமலா பால் தயாரிப்பாளராகி உள்ளார். அவர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அதுல்யா ரவி.
தனது திரைப்பயணத்தின் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் அமலாபால், தற்போது தனது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் படங்களாகத் தேர்வு செய்து நடிப்பதாகக் குறிப்பிடும் அதுல்யா, தன்னைப் போன்று வளர்ந்து வரும் இளம் நாயகிகளுக்கு அமலா வாய்ப்பு அளிப்பது பெரிய விஷயம் எனப் பாராட்டுகிறார்.
அமலா மிக எளிமையாகப் பேசிப் பழகுவாராம். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாதாம்.
“இப்போது திரையுலகில் அமலா பாலுக்கு என தனி மதிப்பு உள்ளது. அவர் ஏறுமுகத்தில்தான் உள்ளார்.
“என்னைப் போன்ற நடிகைகளையும் கவனித்து, உரிய வாய்ப்பு தர வேண்டும் என்று அவர் நினைப்பது பாராட்டுக்குரியது.
“அவரது நட்பு கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி,” என்கிறார் அதுல்யா.
‘ஏமாலி’, ‘நாடோடிகள் 2’, தற்போது ‘அடுத்த சாட்டை’ என ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், நாடு முழுவதும் பரவலாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசினால் கொந்தளிக்கிறார்.
குழந்தைகளுக்கு எதிராவும் நிகழ்ந்து வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாவது கவலை அளிப்பதாகக் கூறுபவர், அண்மையில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவம் சரியான நடவடிக்கை என ஆமோதிக்கிறார்.
“பாலியல் வன்கொடுமை குறித்த தெளிவு எல்லோருக்குமே வர வேண்டும். தெலுங்கானா பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தவறு செய்திருந்தால் காவல்துறை இப்படியொரு நடவடிக்கையை மேற்கொண்டிருக்குமா?
“பொள்ளாச்சியில் நடந்த கொடுமை குறித்த விசாரணை இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை,” என்று ஆதங்கப்படுகிறார் அதுல்யா.
தண்டனை என்பது அனைவருக்கும் ஒரே அளவுகோலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர், அப்போதுதான் தவறுகள் குறையும் என்கிறார்.
குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் அதுல்யா, தற்போது மேற்கொள்ளும் சிறுசிறு நடவடிக்கைகளும் கூட எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை, அதிசயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.
“என்னைப் பொறுத்தவரை என்னைச் சார்ந்துள்ள சமுதாயத்துக்கு என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இதை பிறர் எனக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமே இல்லை,” என்று பொறுப்புணர்வுடன் பேசும் அதுல்யா, நடிப்பில் தற்போது ‘கேப்மாரி’ வெளியீடு கண்டுள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிடுபவர், தனக்காக கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியமில்லாத கதாபாத்திரத்தை எஸ்.ஏ.சி., ஒதுக்கியதாகச் சொல்கிறார்.
“இந்தப் படத்தின் முன்னோட்டத் தொகுப்பு வெளியானபோது இந்துஜா, கதிர் என்று திரையுலக நண்பர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். நான் சற்று வித்தியாசமாக முயற்சி செய்திருப்பதாகப் பாராட்டி உற்சாகப்படுத்ததினர்.
“நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘கேப்மாரி’ படத்தையோ அல்லது நான் நடித்த வேறு படங்களையோ அவர் பார்க்க நேர்ந்தால், எனக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று எதிர்பார்ப்புகளுடன்