கோடிக்கணக்கில் சம்பாதிக்காத தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது வருத்தமளிப்பதாகப் புலம்புகிறாராம் நடிகை லாவண்யா திரிபாதி.
இவர் சசிகுமாரின் ‘பிரம்மன்’ மூலம் தமிழில் அறிமுகமானவர். அடுத்து சி.வி. குமார் இயக்கத்தில் ‘மாயவன்’ படத்தில் நடித்திருந்தார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ‘அந்தாள ராக்சஸி’ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர். இந்நிலையில் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு இவர் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள லாவண்யா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது.