காஜல் அகர்வால், அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா ஆகியோர் 30 வயதைக் கடந்த நிலையில் அவர்களிடம் அடிக்கடி திருமணம் பற்றி கேள்வி கேட்கப்படுகிறது. அனுஷ்கா நடிகர் பிரபாஸுடன் கிசுகிசுக்கப்படுகிறார். அதேபோல் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்மஸ் கொண்டாடி உள்ளார் நயன்தாரா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனால் காஜல் அகர்வால், தமன்னா இருவரும் தங்களின் திருமணம், காதல் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசாமல் நழுவுகின்றனர்.
தமன்னா வீட்டில் அவரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகத் தகவல் வருகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டால், “எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை, யாராவது இருந்தால் சொல்லுங்கள்,” என்று கேள்வி கேட்பவரிடமே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி கலாய்க்கிறார். அதே சமயம் தனக்குத் திருமணம் பேசி முடிவானால் அதுபற்றி பகிரங்கமாக தெரிவிப்பேன் என்கிறார்.
காஜல் அகர்வாலைப் பொறுத்தவரை தொழில் அதிபருடன் காதல் என்று தகவல்கள் வருவதுபற்றி கேட்டால், ‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்வேன்’ என்று கூறும் அவர், ‘திருமணம் எனது தனிப்பட்ட விஷயம், அதுபற்றி தெரிந்துகொள்ள மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டியதில்லை’ என்கிறார்.
விஜய்சேதுபதியுடன் திரிஷா நடித்த படம் ‘96’. இதில் பள்ளித் தோழனை காதலிப்பது போல் நடித்திருந்தார். “காதல் கதைகள்தான் எளிதாக மக்களை அடைகிறது என்று எண்ணுகிறேன். எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் ‘96’ கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது,” என்கிறார் திரிஷா.