இன்னும் ஒருசில வாரங்களில் பொங்கல் திருநாள் வரவுள்ளது. இந்த சமயத்தில் மூன்று படங்கள் பொங்கல் விருந்தாக படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் ‘தர்பார்’, தனுசின் ‘பட்டாஸ்’, சிவாவின் ‘சுமோ’ ஆகிய மூன்று படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வருவது தற்போது உறுதி யாகி உள்ளது.
இந்த மூன்று படங்களில் அதிக திரையரங்குகளில் ‘தர்பார்’ படம் வெளியாக உள்ளது.
2019ல் பொங்கல் பண்டிகையில் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்து நல்ல வசூலை ஈட்டின.
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படத்தின் முன்னோட் டக் காட்சிகளும் பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
பொங்கலுக்கு முன்பாகவே படத்தை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிக திரை யரங்குகளில் ‘தர்பார்’ திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பட்டாஸ்’ படத்தில் தனுஷ் ஜோடியாக மெஹ்ரீன் நடித்துள்ளார். நாசர், நவீன் சந்திரா, சதீஷ், சினேகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தை ஜனவரி 16ஆம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
‘சுமோ’ படத்தில் சிவா ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். எஸ்.பி.ஹோசிமின் இயக்கி உள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார்.