அட்லியை நழுவவிட்ட ஷாருக்கான்

1 mins read
8514d3de-6b53-4055-8f48-e3cfcef72872
அட்லி-ஷாருக்கான் படம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டது. கடைசியில் அந்த வாய்ப்பை ‌ஷாருக்கான் நழுவ விட்டுவிட்டார். -

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் இந்தப் படத்தையடுத்து அட்லி, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்த படத்திற்கான திரைக்கதையை அட்லி, வெளிநாட்டில் எழுதி முடித்துவிட்டதாகவும் அந்த திரைக்கதையைப் படித்துப் பார்த்த ஷாருக்கான் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. எனவே அட்லி-ஷாருக்கான் படம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென அட்லி-ஷாருக்கான் படம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அட்லி இயக்கிய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஷாருக்கான் தரப்பினர் அட்லி குறித்து விசாரித்ததாகவும் அவர்கள் யாருமே அட்லி குறித்து நல்ல கருத்தை கூறாததால் ஷாருக்கான் அட்லி படத்தை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜூனியர் பாலையா படத்தை அட்லி இயக்குவதாக இருந்ததாகவும் அவர்கள் தரப்பிலும் விசாரித்துப் பார்த்ததில் ஒருவர் கூட அட்லி குறித்து நல்ல விதமாக கூறாததால், அந்தப் படமும் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.