‘மாயன்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது பிந்துவா இது? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார் அவர்.
நடிகை பிந்து மாதவி 2011ல் வெளிவந்த ‘கழுகு’ படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக தமிழில் நடித்து வருகிறார்.
தமிழில் சரியாக வாய்ப்புகள் இல்லாததால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதையடுத்து மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள கதைகளை கவனமாக தேர்வு செய்ய ஆரம்பித்தார். அப்படித் தேர்வு செய்யப்பட்ட படம்தான் ‘மாயன்’.
கற்பனை நிறைந்த கடவுள் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் சுவரொட்டியை ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஏற்கெனவே வெளியிட்டார்.
தற்போது இந்த படத்தின் சில புகைப்
படங்கள் வெளியாகி உள்ளன. இதில், பிந்து, பார்வதி வேடத்திலும் வினோத், சிவன் வேடத்திலும் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும்போது, பிந்துவா இது என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது பிந்து மாதவியின் பார்வை.
பிந்து மாதவி இதுவரையில் மென்மையான பெண்ணாகத்தான் நடித்து இருக்கிறார். ஆனால், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் கோபம் வந்தால் பாய்ந்து பாய்ந்து அடிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ‘மாயன்’ படத்தின் படங்களைப் பார்க்கும்போது பிந்து பார்வதி வேடத்தில் ரௌத்திரம் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரிகிறது.