ஒரு சில நடிகர்கள் மேடைகளிலும் கூட்டங்களிலும் பார்க்கும்போது சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள். தனிப்பட்ட முறையில் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். டோலிவுட்டில் கோபக்கார ஹீரோ என்று சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவை குறிப்பிடுவார்கள். பொது இடங்களில் கூட தன்னிடம் யாராவது வரம்பு மீறினால் பளார் என்று அறை விடுவார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்திருக்கின்றன. அந்தக் காணொளிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பு நடக்கும்போதும் முறைப்புடனே அவர் அமர்ந்திருப்பதால் அவர் அருகே செல்ல பலரும் தயங்குவார்கள். இதையெல்லாம் கேள்விப்படும் நடிகைகள் அவருடன் நடிக்க பயப்படுகின்றனர். பயோபதி ஸ்ரீனு இயக்கும் ஒரு படத்தில் என்டி.பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க, ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்த சோனாக்ஷி சின்ஹாவை கேட்டபோது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் கேத்ரின் தெரசா அவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கேத்ரின்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ‘கலகலப்பு 2’ திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். அதற்குக் காரணம் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த விதிமுறைகளையும் போடுவதில்லை. தாராளமாக கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
கைவசம் வேறு படம் இல்லாத நிலையில் புதிய பட வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்போதுதான் என்.டி.பாலகிருஷ்ணா பட வாய்ப்பு வந்தது. அவருடன் நடிக்க கோடியில் சம்பளம் தரத் தயாராக இருந்தனர். அதனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கேத்ரின்.
இதன்மூலம் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் கேத்ரின் தெரசாவும் இணைந்திருக்கிறார்.