சின்னத்திரை மூலம் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள பிரபல தொகுப்பாளினி நட்சத்திரா தற்போது சில தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு வெள்ளித் திரையிலும் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
ஆனந்த்நாக் நாயகனாக நடிக்கும் ‘வணிகன்’ என்ற படத்தில் இவர்தான் கதாநாயகி. இது ஒரு திகில் படமாம். அதே சமயம் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜா வாங்கி உள்ளார். ஜி.பி. டேனியல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு வெற்றி வலம் வரமுடியும் என நம்புவதாகச் சொல்கிறார் நட்சத்திரா.
“தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் அளித்த ஆதரவால்தான் சினிமாவிலும் அறிமுகமாகிறேன்.
“ரசிகர்கள் மனதில் எனக்கு நல்லதொரு இடம் கிடைத்தால் அதுவே என்னைப் பொறுத்தவரையில் பெரிய சாதனைதான். அதுவே எனக்குப் போதுமானது,” என்கிறார் நட்சத்திரா.