கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிப்பில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கால் டாக்சி'. வாடகை கார் ஓட்டுநர்கள் சிலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அதற்கான பின்னணி என்ன என்பதை திகில் கலந்த திரைக்கதை மூலம் விவரிக்கிறது இப்படம். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பாண்டியன். இப்படத்துக்கான வசனங்களையும் இவர்தான் எழுதியுள்ளார். சென்னையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
'கால் டாக்சி'
1 mins read
சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கால் டாக்சி'. -

