நட்சத்திர தங்குவிடுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளரைத் தாம் தாக்கியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி.
மேலும், தாம் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனினும் சஞ்சனா மீது பெங்களூரு காவல்துறையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சனா தரப்பு வாக்குவாதம் மட்டுமே செய்ததாக கூறுகிறது.