பாலியல் சம்பந்தப்பட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தம்மை பலரும் அணுகியதாகச் சொல்கிறார் ராதிகா ஆப்தே.
ஆனால், அத்தகைய வாய்ப்புகளை தாம் அறவே புறக்கணித்துவிட்டதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு துறையில் கால்பதித்துவிட்டால் அது மட்டுமே நமக்கான வழி என்று அர்த்தமல்ல. ஆனால் என் விஷயத்தில் என்னை மீண்டும் மீண்டும் ஒரே பாதைக்கு அழைத்தனர்.
“ஆனால் அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டேன். தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்,” என்கிறார் ராதிகா ஆப்தே.
‘கபாலி’யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த தமக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக கூறும் இவர், தனது திறமையை வெளிப்படுத்த தமிழ் இயக்குநர்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.